ரகுராம் ராஜனுக்கு பிறகு...ஐ.எம்.எப்-ல் கால்பதிக்கும் இந்திய பெண்!

Home > தமிழ் news
By |

பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது இந்த பதவியில் உள்ள மவுரைஸ் ஆப்ஸ்ட்பெல்ட்  ஓய்வு பெற உள்ள நிலையில், இந்திய பெண் கீதா கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத், ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார். டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ, டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் எம்ஏ படித்தவர்.  கீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார்.

 

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்  பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்.

 

இது குறித்து ஐஎம்எப் தலைவர் லகார்டே வெளியிட்ட அறிக்கையில் "கீதா கோபிநாத் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர்.அவரது திறமைகளை பல்வேறு தளங்களில் நிருபித்துள்ளார்".பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர் கீதா கோபிநாத். அவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக ஐஎம்எப்க்கு நியமிப்பதில் பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

KERALA, GITA GOPINATH, INTERNATIONAL MONETARY FUND, IMF, CHIEF ECONOMIST

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS