அமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!

Home > தமிழ் news
By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இன்று சந்திக்கவுள்ளதாக முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.மேலும் ரஷ்யாவில் 20 முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் ஆகியவை இன்று கைதாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

 

இதேபோலவே, இந்தியா - ரஷ்யா இடையேயான எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ரஷியாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணையை இந்தியா வாங்குவதற்காக கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் புடின் சந்தித்தபோதே தீர்மானிக்கப்பட்டது.

 

முன்னதாக ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் செய்தால், பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NARENDRAMODI, AMERICA, INDIA, PUTININDIA, INDORUSSIA, VLADIMIRPUTIN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS