‘பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்தால் இந்தியா புள்ளிகளை இழக்க நேரிடும்’.. பிசிசிஐ அறிவிப்பு!

Home > தமிழ் news
By |

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.

இந்த கொடூர தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான இணக்கமான நாடு என்கிற அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இதனை அடுத்து மும்பை கிரிக்கெட் அலுவலகத்தில் இருந்த பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் புகைப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் எந்தவிதமான விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை எனவும், பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்தால் இந்திய அணி புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

TEAMINDIA, BCCI, ICC, WORLDCUP2019, PAKISTAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS