‘43 வருஷ நண்பர்.. ஆனால் ஒருநாளும் அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை’!

Home > தமிழ் news
By |

43 ஆண்டுகளாக தனக்கு பிரதமர் நரேந்திர மோடி நண்பராகவும் தெரிந்தவராகவும் இருக்கிறார் என்றாலும் அவர் டீ விற்று ஒருநாளும் பார்த்ததில்லை என்று பிரவீன் தொகாடியா கூறியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முன்னதாக கட்சியளவில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்த மோடி பின்னாளில் பிரதமாரானார். கடந்த ஐந்தாண்டுக்கு முந்தைய 20 மாதங்களில் பிரதமர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் நரேந்திர மோடி பெருமளவில் இந்திய மக்களிடையே பிரபலமாகினார்.

இந்த ஐந்தாண்டுகளில் மேன் கீ பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுவது, தனது கருத்துக்களை வெளிப்படுத்துவது என்றிருந்த மோடி மித்ரோன் (தோழமைகளே) என்று மக்களை அழைக்கச் செய்வார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் சிறு வயதில் டீ விற்றதாக ஒரு சில இடங்களில் தானே முன்வந்து கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி உண்மையில் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காகவே, தான் டீ விற்றதாக குறிப்பிடுவதாகவும், உண்மையில் 43 ஆண்டுகால நண்பராக தனக்கு நரேந்திர மோடியை நன்றாக தெரியும் என்றும், ஆனால் அவர் டீ விற்றதை ஒருபோதும் தான் பார்த்ததில்லை என்றும் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் முன்னாள் தலைவரும் அந்தராஷ்ட்ரிய ஹிந்து பரிஷித் அமைப்பின் தற்போதைய தலைவருமான பிரவீன் தொகாடியா குறிப்பிட்டுள்ளார். இந்தியா டுடே உள்ளிட்ட தளங்களில் வெளிவந்துள்ள இந்த செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

NARENDRAMODI, PRAVEEN TOGADIA, PM, TEA-SELLER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS