'இவர் பயங்கரமான சூப்பர்ஸ்டார் ரசிகரா இருப்பாரோ'?...பேட்ட ஸ்டைலில் தெறிக்க விட்ட வீரர்!

Home > தமிழ் news
By |

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில்,ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.முதல் 17 போட்டிகள் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடக்கும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே ரசிகர்களுக்கு டபுள் சந்தோசம் என்னவென்றால்,முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.ஐபிஎல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில்,சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயியுள்ளார்.தென்னாப்ரிக்க சுழல் பந்து வீச்சாளரான அவர்,அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு கலகலப்பை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னைக்கு வர இருக்கும் அவர்,படு குஷியாக தமிழில் ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் ''என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23ம் தேதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில'' என பேட்ட ஸ்டைலில் தெறிக்க விட்டுள்ளார்.

இம்ரானின் ட்வீட்டுக்கு பதில் அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ், ''நலம், நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது? தெற்கு ஆப்ரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும். தம்பி நிகிடி சவுக்கியமா? வரும்போது மறவாமல் சீமை ரொட்டியும் மிட்டாயும் வாங்கி வரவும்'' என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளது.

பந்து வீசும் போது விக்கெட் எடுத்துவிட்டால்,மைதானத்தையே சுற்றி ஓடி வரும் இம்ரான் தாஹிருக்கு,'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என சென்னை ரசிகர்கள் செல்ல பெயர் வைத்திருக்கிறார்கள். இதனிடையே மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ள இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS