'நாட்டுக்காக நான் உழைத்தது எல்லாம் வீணா போச்சு'...விரக்தியில் பிரபல கிரிக்கெட் பிரபலம்!

Home > தமிழ் news
By |

நாட்டுக்காக உழைத்த தனது 20 ஆண்டு உழைப்பை அசிங்கப்படுத்தி,வீணாக்கி விட்டார்கள் என,இந்திய  பெண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை,மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

 

வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் ‘டி–20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இதில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக மிதாலி பி.சி.சி.ஐ.,யிடம் முறையிட்டார்.அதில் பயிற்சியாளர் ரமேஷ் பவார், மற்றும் நிர்வாக குழு அதிகாரி டயானா அணியோர் மீது குற்றம் சாட்டினார்.தவிர,தொடரின் பாதியிலேயே தன்னை ஓய்வு பெறும்படி வற்புறுத்தியதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

 

இதுகுறித்து மிதாலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நாட்டுக்காக 20 ஆண்டு வியர்வை சிந்தி உழைத்த கடின உழைப்பு வீணானது. என் தேசப்பற்றை சந்தேகித்துள்ளனர். என் திறமை கேள்விக்குறியாகியுள்ளது. இது என் வாழ்வில் கறுப்பு நாள், கடவுள் தான் மன உறுதியளிக்க வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

BCCI, CRICKET, MITHALI RAJ, RAMESH POWAR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS