'நான் தீவிர விஜய் ரசிகன்'...எப்பவும் பஸ்டே பஸ்ட் ஷோ பாத்துருவேன்...ஐபிஎல் ஏலத்தில் கலக்கிய மிஸ்டரி ஸ்பின்னர் !

Home > தமிழ் news
By |

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில்,8.4 கோடிக்கு பஞ்சாப்பால் ஏலம் எடுக்கப்பட்ட தமிழக பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனக்கு பிடித்த விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

 

இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் 'ஏலம் நடைபெறும் போது நான் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தேன்.எனது பெற்றோரும் என்னுடன் சேர்ந்து ஏலத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்.என்னை கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏலம் எடுத்தது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. தஞ்சாவூரில் பிறந்த எனது கிரிக்கெட் பயணம் சென்னையில் தான் தொடங்கியது.அதன் பிறகு சில காலம் காயம் காரணமாக விளையாடுவதில் இருந்து ஒதுங்கி இருந்தேன்.

 

அந்தச் சமயத்தில் நான் ஸ்பின் பவுலராக பயிற்சி பெற்றேன்.  நான் ரிசர்வ் உள்ளிட்ட பல கிளப் அணிகளுக்காக விளையாடி இருக்கிறேன். தமிழ் நாடு பீரிமியர் லிக்தான் என்னை மெருக்கேற்றியது. அங்கு நான் நிறைய கற்றுக் கொண்டேன். விஜய் ஹாசாரா, ரஞ்சி கோப்பையிலும் ஆடி இருக்கிறேன்.வருகின்ற ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் எனது திறமையை நிரூபிக்க பெரும் வாய்ப்பாக அமையும் என கருதுகிறேன்.

 

மேலும் நான் எங்கு சென்றாலும் என்னுடன் பந்தை எடுத்து செல்வேன்.அப்போது தான் என்னால் பயிற்சியில் ஈடுபட முடியும்.கிரிக்கெட்டை தவிர்த்து எனக்கு சினிமா பார்ப்பது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.நடிகர் விஜயின் தீவிர ரசிகர் நான்.எங்கிருந்தாலும் விஜய் படத்தை முதல் நாள் பார்த்துவிடுவேன்”  என்றார்.

IPL, CRICKET, KINGS-XI-PUNJAB, VARUN CHAKRAVARTHY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS