‘நாங்கள் பதிலடி கொடுக்கமாட்டோம் என நினைத்து பேசாதீர்கள்’..சீறிய பாகிஸ்தான் பிரதமர்!

Home > தமிழ் news
By |

காஷ்மீரில்  நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டக்கூடாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்கிற பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் தான் என இந்தியா குற்றம்சாட்டியது.  இதனை அடுத்து பாகிஸ்தானுடனான இணக்கமான நாடு என்கிற அந்தஸ்தை இந்தியா திரும்பப்பெற்றது. மேலும் வர்த்தகம் செய்யவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்தும் பாகிஸ்தானை இந்தியா நீக்கியது.

இந்நிலையில் பயங்கவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்,‘தீவிரவாதத் தாக்குதலில் இந்தியா நீதிபதி போலவும், நடுவர் போலவும் விளையாடி வருகிறது. ஆதராமில்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டிவருகிறது. பாகிஸ்தான் பதிலடி கொடுக்காது என எண்ண வேண்டாம். போரைத் தொடங்குவது எளிது, இதை மனிதனால் எளிதாக செய்ய முடியும். ஆனால் போர் எப்படி முடியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்’ என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தாக்குதல் தொடர்பாக இந்தியா ஏதேனும் தகவல் அளித்தால், இந்தியாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என பாகிஸ்தான் பிரதமர் புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

CRPFJAWANS, PULWAMATERRORISTATTACK, PAKISTAN, IMRANKHAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS