வீரர்களுக்கு அவர்களின் திறமைகளை நிரூபிக்க பல வாய்ப்புகள்  வழங்கப்படுகிறது.அந்த தருணத்திலும் அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க தவறினால், புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை தவிர வேறு வழியில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கடுமையாக கூறியுள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.இது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறும்போது, “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே விளையாடியதாக கருதுகிறேன். 5 டெஸ்ட் தொடரிலும் மொத்தமாக 60-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்தது அவர்களின் திறமைக்கு சாட்சியாக உள்ளது. அதேசமயம் பீல்டிங்கும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் பேட்டிங் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்யும்போது அவர்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்படியும் அவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டாவிட்டால்  இளம் வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும்.

 

நமது தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அதேசமயம் இரண்டு அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த சில வருடங்களாகவே 3, 5 வீரர்களாக களமிறங்கும் புஜாரா மற்றும் ரஹானே நன்றாகவே செயல்படுகின்றனர். மிடில் ஆர்டரில் ஆட அவர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கிறது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாட வேண்டும்,'' என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS