‘இந்து பெண்ணை தொடுபவர்கள் கையை இப்படி செய்யுங்கள்’.. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை!

Home > தமிழ் news
By |

‘இந்து பெண்ணைத் தொட்டால், அந்த கையை வெட்டுங்கள்’ என பாஜக மத்திய இணை அமைச்சர் கூறியுள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரான அனந்த்குமார் ஹெக்டே பல கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். இதற்குமுன் மதச்சார்பற்றவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது எனவும், அவர்களுக்கு தங்களது பெற்றோர் யார் என்றே தெரியாது எனவும், மதசார்பின்மை என்கிற வார்த்தை இல்லாதவாறு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் எனவும் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். பின்னர் இதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, ‘தாஜ்மஹால் முஸ்லீம்களால் கட்டப்பட்டதல்ல, அந்த இடத்தில் தேஜோ மஹாலயா என்னும் சிவன் கோவில் இருந்தது.தேஜோ மஹாலயா பின்னாளில் தாஜ்மஹால் என ஆனது’ என்று பேசினார்.

அதனைத்தொடர்ந்து தற்போது அவர், ‘இந்து பெண்ணின் கையைப் பிடித்தால், அந்த கை வெட்டப்படும்’ என கூறியுள்ளது மேலும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. பாஜக -வின் மத்திய இணையமைச்சராக இருக்கும் அனந்த்குமார் பேசியுள்ள இந்த கருத்துக்களால் பல தரப்புகளிலிருந்தும் விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

ANANTKUMARHEGDE, BJP, WOMEN, CONTROVERSY, UNION MINISTER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS