'ஒழுங்கா சாப்படலன்னா 50 ரூபாய் அபராதம்'..மிரட்டும் ஓனர்.. வைரலாகும் ஹோட்டல்!
Home > News Shots > தமிழ் newsபலகோடி ரூபாய் முதலீட்டில் படமெடுக்கும் அளவுக்கு உலகின் பல நாடுகள் வளர்ந்த நிலையில் உணவுப் பஞ்சம் தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் வீணாகும் உணவு ஒரு பக்கம், அந்த சிறிதளவு உணவும் கூட இல்லாமல் செத்து மடியும் மக்கள் ஒரு பக்கம் என பூமியின் சமநிலை குறைவதற்கு உணவுக் கிடைக்கா நிலை ஒரு காரணமாக இருக்கிறது.
ஆனால் உண்மையைச் சொன்னால் இது உணவுப்பற்றாக்குறை அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவர் இரண்டு சப்பாத்திகளுக்கு மேல் உண்ண முடியாமல், மீதமுள்ளவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார். அதனால் இன்னொருவருக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது யதார்த்தமான புரிதல் அல்ல. உண்மையில் உணவை ஒருவர் வீணடிப்பதால் அந்த உணவு இன்னொருவருக்கு கிடைக்காமல் இல்லை. காரணம் உணவுப்பற்றாக்குறையே அல்ல.
ஆகையால் உணவு கிடைக்காமல் தவிப்பவர்கள் மீதான அக்கறை உள்ளவர்கள் பலரும் குறிப்பிட்ட சில உணவகங்களுக்குச் சென்று, மீந்திருக்கும் உணவுகளை வெளியில் எடுத்துச் சென்று இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உன்னதமான செயல்களைச் செய்து வருகின்றனர். ஆனால் உணவை சாப்பிடத் தொடங்கிவிட்டு, பின்னர் உண்ணாமல் வீணடிப்பதால் அதனை குப்பையில்தான் கொட்ட வேண்டியுள்ளது. இதனை முறைப்படுத்துவதற்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்திருக்கிறார் தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்.
அதன்படி தனது ஹோட்டலில் உணவுண்ண வருபவர்கள் உணவை வீணடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்து வருகிறார். லிங்காலால் கேதாரி என்கிற பெயருடைய அந்த உரிமையாளர் இவ்வாறு வசூலித்த தொகையை குழந்தைகள் நல காப்பகம் ஒன்றுக்கு கொடுக்கிறார். தொடர்ந்து உணவை மிச்சம் வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவின் அருமையை உணர்த்தவே தான் சற்று கடுமையாக நடந்துகொண்டதாகவும், பின்னர் அவரை பலர் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- 'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை!
- ‘சாப்பாட்டில் வந்த சண்டை’.. திருமணத்தன்றே விவாகரத்து.. விநோத தம்பதியர்!
- ‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ!
- Kerala Tourism Tweets Photo Of 'Aviyal'; Get Brutally Trolled By Unconvinced Malayalis
- Dressed Up Like A 'Walking Dustbin', This Man Has An Important Message For Society
- Meet Azhar Maqsusi, The Man Who Feeds 1000-1200 Poor People On A Daily Basis
- 5000 தரமற்ற உணவகங்கள்: ஆன்லைனில் ஆர்டர் பண்றவரா நீங்க?
- What? Couple gets drunk during honeymoon, buys hotel in Sri Lanka
- WATCH VIDEO | UberEats Delivery Man Caught Eating Out Of Customer's Order
- Woman Claims To Have Found Sanitary Napkins In Her Food Twice In Two Days