இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை!

Home > தமிழ் news
By |

தவறான முறையில் பயன்படுத்தப்படும் இந்திய அரசியல் கட்சிகளின் வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை செய்யப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

முன்னதாக வாட்ஸ் ஆப் மூலம் பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதில், இனி ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மட்டும்தான் அனுப்ப முடியும் என அறிவித்தது.

இந்நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் வாட்ஸ் ஆப்பை தவறான வழியில் பயன்படுத்துவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு முன் பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு சாதமாக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. மேலும் சமூக வலைதளங்களின் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் இருந்ததாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன.

தற்போது இந்தியாவில் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் முறைகேடான வழிகளில் தலையிட்டு கட்சிகளின் செல்வாக்கை மக்களிடம் சென்று சேர்க்க உதவி செய்யும் சமூக வலைதளங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.

இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமான வகையில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முயற்சிப்பதாக வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி கார்ல் வூக் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்ந்தால் அவர்களின் கணக்கைத் துண்டிக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

WHATSAPP, POLITICS, RESTRICT, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS