ஐ.சி.ஐ.சி.ஐ-யிலிருந்து சந்தா கொச்சார் விலகல் சர்ச்சை: புதிய அதிகாரி இவர்தான்!
Home > தமிழ் newsஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின்யின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சார் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் பற்றிய சில வாதங்கள் அண்மையில் எழுந்தன. வீடியோகான் நிறுவனத்துடன் சேர்ந்து தொழில் புரிந்த இவரது கணவர் மூலமாக அந்நிறுவனதுக்கு கடன் வழக்கும் விஷயத்தில் நடந்துகொண்ட விதம் பற்றிய சில குற்றச் சாட்டுகள் சந்தா கொச்சார் மீது புகார் வந்தது.
அதன் பின்னர் இந்தியா முழுவதும், சந்தா கொச்சார் விவகாரம் ஊடகங்களில் பெரிதாகத் தொடங்கியதை அடுத்து, தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த சந்தா கொச்சார் இந்த ராஜினாமாவை செய்வதாக கடிதத்தை அளித்துள்ளார். இந்நிலையில் நேற்றிய தினம்வரை பொறுப்பில் இருந்த சாந்தா கொச்சாரின் இடத்தை இன்று முதல் சந்தீப் பக்ஷி நிரப்பியுள்ளார். சந்தீப் பக்ஷி இதுவரையில் அதே நிறுவனத்தின் COO-வாக (முதன்மை இயக்க அலுவலர்) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS