'அட ச்சே'...இதெல்லாம் எவ்வளவு கேவலமான காரணம்'...தடை குறித்து கொதித்தெழுந்த வீரர்கள்!

Home > தமிழ் news
By |

குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட ஓவர்களை வீசவில்லை என்பதற்காக,மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரை ஐசிசி அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது மிகவும் கேவலமான,முட்டாள்தனமான முடிவு என பல்வேறு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஐசிசியின் இந்த முடிவு,ஆரோக்கியமான விளையாட்டிற்கு நல்லதல்ல என ஷேன் வார்ன், மைக்கேல் வான் போன்ற வீரர்கள் கடுமையாக சாடியுள்ளார்கள்.இங்கிலாந்து 3-0 என்று ஒயிட்வாஷ் வாங்குவதை தடுப்பதற்காக ஐசிசி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறதா என,ரசிகர்கள் வலைத்தளங்களில் தங்களின் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவ் கேமரூன் தங்கள் பக்கம் இருக்கும் கோபத்தை மிக கடுமையாக அதே நேரத்தில் மிகவும் நாகரிகமான முறையில் பதிவு செய்துள்ளார்.'ஐசிசியின் அனைத்து  விதிமுறைகளுக்கும் நாங்கள் கட்டுப்பட்டு தான் நடக்கின்றோம்.ஆனால் டெஸ்ட் தொடர் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள்,டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.

புத்துணர்ச்சி பெற்ற மே.இ.தீவுகள் அணியினை முடமாக்கும் செயலே இந்த தடை உத்தரவு ஆகும்.ஆனால் ஜேசன் தற்போது நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு ஒருநாள் தொடருக்காக தயாராவார்'என் மிக கடுமையாக சாடியுள்ளார்.

CRICKET, ICC, JASON HOLDER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS