‘டிக் டாக்’தடை செய்யப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான்..கூறிய தமிழிசை சவுந்தரராஜன்!

Home > News Shots > தமிழ் news
By |

டிக் டாக் செயலியை தடை செய்தால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

டிக் டாக் எனப்படும் செயலியின் மூலம் பலரும் பலவிதமாக வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இதன் மூலம் குற்றங்கள் பல நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இந்த செயலியின் மூலம் பின்னணியில் ஒரு பாடலை ஒலிபரப்பிக் கொண்டு அதற்கேற்றவாறு வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதன் உச்சகட்டம் என்னவென்றால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை டிக் டாக் செயலியின் மூலம் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் மாணவர்கள் பகிருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்களை கேலி செய்யும் விதமாக வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றி வருகின்றனர். இது போன்ற செயல்களால் டிக் டாக் செயலியின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வந்த நிலையில், இது குறித்து பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், ‘டிக் டாக் செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என அறிந்து மத்திய அரசின் உதவியுடன் ப்ளூவேல் கேமை தடை செய்தது போல் டிக் டாக் செயலியும் தடை செய்யப்படும்’ என அறிவித்தார்.

மேலும் டிக் டாக் தடை பற்றிய கேள்விக்கு பதிளலித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  ‘டிக் டாக் செயலியை தடை செய்தால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான். இதில் எங்களை போன்றவர்களை தான் அதிகமாக கேலி செய்கிறார்கள் ’ என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

TIKTOK, TAMILISAISOUNDARARAJAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES