இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்தநிலையில் கடினமான சூழ்நிலையில் இருந்து அணியை நான் காப்பாற்றுவேன் என கையை உயர்த்தும் வீரர்களே அணிக்குத் தேவை என, கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,''நாங்கள் எதைப்பற்றியும் இப்போது யோசிக்கவில்லை. கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த போட்டியின்போது தான் நாங்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டுளோம். கடினமான சூழ்நிலையில் இருந்து அணியை நான் மீட்டுக் காப்பாற்றுவேன், என கையை உயர்த்தும் வீரர்களே அணிக்கு தேவை.

 

எல்லாம் நம் மனதில் தான் உள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 4-5 நாட்கள் உள்ளன என்று எண்ணாமல்,அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 4-5 நாட்கள் மட்டுமே உள்ளன என்று யோசிக்க வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை.தவறுகள் செய்யவில்லை என்று மறைக்க முடியாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன் இதில்தான் எங்கள் கவனம் உள்ளது,'' என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS