‘நடந்தது இதுதான்’..கோர்ட் வாசலில் போட்டு உடைத்த நிர்மலா தேவியின் பரபரப்பு பேட்டி!

Home > தமிழ் news
By |

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி தன்னை சிபிசிஐடி மிரட்டி வாக்குமூலம் எழுதியதாகவும், தனக்கு ஜாமின் வழங்குவதன் பின்னணியில் சில அரசியல் சதிகள் உள்ளதாகவும்  நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் தகாத முறையில் பேசி, தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட விவகாரத்தில் செல்போன் பேசிய ஆடியோ வெளியாகியதால், கைது செய்யப்பட்டபோது வெளிச்சத்துக்கு வந்து பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட நிர்மலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 30, 2019) ஆஜரானார். அதற்கும் முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிர்மலாதேவி, தனக்கு மிரட்டல்கள் இருப்பதாகவும், தான் கூறியதாக சிபிசிஐடி தயார் செய்த வாக்குமூலங்கள் போலியானவை என்றும், தனக்கு ஜாமின் வழங்காதமைக்கு பின்னணியில் பெரிய கைகளின் அரசியல் ஓங்கி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு நிர்மலாதேவி பேசிக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே நிர்மலாதேவியை பேசவிடாமல் மகளிர் காவலர்கள் அவரது வாயைப்பொத்தி இழுத்துச் சென்றதாக நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னதாக இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடர்புப்படுத்தப்பட்டதை அடுத்து ராஜ்பவன் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் நிர்மலாதேவி ஆளுநர் மாளிகைக்கு கடைசி ஓராண்டில் வரவே இல்லை என்றும், ஆளுநர் மீதான மறைமுக மற்றும் நேரடி அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் தான் ஆளுநர் மாளிகைக்கு 4 முறை சென்றதாக நிர்மலாதேவி பரபரப்பான வாக்குமூலத்தை அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி இத்தகைய பேட்டியை அளித்துள்ளது தமிழக சூழலில் பெரும் திருப்பங்களை உருவாக்கி வருகிறது.  மேற்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு இவ்வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

COLLEGESTUDENTS, NIRMALADEVI, COURT, REPORT, MEDICALCOLLEGE, CBCID

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS