‘இனி குடிச்சுட்டு வாகனம் ஓட்டி போலீஸ்கிட்ட சிக்குனா இதுதான் கதி’.. காவல்துறை அதிரடி!
Home > தமிழ் newsமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் போலீஸாரிடம் சிக்கினால், அவர்களின் மீது புதிய, அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக ஹைதராபாத் காவல்துறை முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி, போக்குவரத்து காவலர்கள் சோதனைக் கருவியை பயன்படுத்தி சோதிப்பது உண்டு. பலரும் இதனை பொருட்படுத்தாமல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவே செய்கின்றனர். மீறி மாட்டிக்கொண்டால் அபராதத் தொகையை கட்டிவிட்டு நடையைக் கட்டலாம் என்று நினைக்கின்றனர். இன்னும் பலர் காவல்துறையினர் மதுசோதனைக் கருவியை நோக்கி ஊதிக்காட்டச் சொல்லும்போது ஊழல் செய்துவிடுகின்றனர்.
ஆக, மது அருந்திவிட்டு கட்டுப்பாடின்றி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஹைதரபாத் காவல்துறை ஒரு புதிய உத்தியை யோசித்துள்ளது. அதன்படி, இனி ஹைதராபாத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தப்பித் தவறியேனும் பிடிபட்டால், அவர்கள் பிடிபட்ட இடம், அவர்களின் பெயர், நேரம், பிடிபட்ட தேதி முதலான விபரங்களை, பிடிபட்டவர் பணிபுரியும் அலுவலகத்தின் எச்.ஆர் பார்வைக்கு அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளனர் காவல்துறையினர்.
அதேசமயம் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறை பயமுறுத்துவது இல்லை என்றும், அவர்களின் ஆபீசுக்கு தகவல் அனுப்பி போட்டுக்கொடுப்பது இல்லை என்றும் கூறிய காவல்துறை, இது ஒருவிதமான விழிப்புணர்வுக்காகவே என்று விளக்கமளித்துள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- அசுரவேகத்தில் வந்த அரசுப்பேருந்து .. பணியில் இருந்த காவலர்களுக்கு நேர்ந்த சோகம்!
- குடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்!
- 'சென்னை போலீஸில் காவலர்கள் மட்டுமல்ல...ரோபோவும் வேலை செய்ய போகுது'...காவல்துறையில் புதிய மைல்கல்!
- போலீஸ் ஸ்டேஷன் முன் டப்ஸ்மாஷ் சேட்டை.. ‘டிக் டாக்’ இளைஞர்களுக்கு வந்த சோதனை!
- சார்...''அவ என்னோட இதயத்தை திருடிட்டு போய்ட்டா''...இளைஞரின் புகாரால் அதிர்ந்த காவல்துறையினர்!
- ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவி.. திருப்பூரில் பரபரப்பு!
- Man files complaint to find his missing heart; Cops left bewildered
- ‘ஹலோ போலீஸா.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க’..திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு அழைத்த திருடன்!
- Cop beaten up for trying to stop New Year's Eve party
- ‘இதெல்லாம் ஒரு காரணம்’.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தந்தை!