'பொங்கல் பரிசு ஆயிரம் எங்கே?'.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிப்போட்ட கணவர்!

Home > தமிழ் news
By |

உசிலம்பட்டியில் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அரசு வழங்கிய ரூபாய் ஆயிரத்தை தர மறுத்ததால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை காவல் துறை கைது செய்தது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் ரேசன் கார்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை, உசிலம்பட்டி அருகே ஏழுமலை எனும் பகுதியைச் சேர்ந்த ராசாத்தி என்பவர்  தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக அளிக்கும் இந்த ஆயிரத்தை ரேசன் கடைக்குச் சென்று வாங்கியுள்ளார். இதன் பின்னர் துரதிஷ்டவசமாக  ராசத்தியிடம் முன்னதாக ரூபாய் ஆயிரம் கடன் கொடுத்தவர் அந்த பணத்தை அவரிடம் இருந்து வாங்கிச்சென்றுள்ளார்.

பொங்கல் பரிசுப் பணத்தை கடன்காரர் வாங்கிச் சென்றது அறியாத ராசத்தியின் கணவர் ராமர், அவரிடம் ரேசன் கடையில் கொடுத்த ஆயிரம் எங்கே? எனக் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். பின் இருவருக்குமிடையான நீண்ட வாய்த்தகராறில்  நிதானம் இழந்த ராசாத்தியின் கணவர் ராமர் ஆத்திரமடைந்து பக்கத்தில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் ராசத்தியை மூர்க்கமாக தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த நிலையில் ராசாத்தி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். பிறகு ராமர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற காரணத்திற்காக சரண் அடைந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக ராசாத்தியின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் ராமரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PONGAL, PONGALGIFT, CRIME, MURDER, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS