வாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை!

Home > தமிழ் news
By |

வீட்டு வாடகை தராத காரணத்தால் வீட்டின் உரிமையாளர் 7 வயது சிறுமியின் மீது மின்சாரம் பாய்ச்சியதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, வாடகை குடியிருப்பு வாசிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மதுரையில் பேச்சியம்மன் படித்துறைக்கு அருகே, வீடு வாடகைக்கு விட்டிருந்த உரிமையாளர்தான் மணிவண்ணன் என்பவர். இவரது மகன் சந்தோஷ்.  இவர்கள் வாடகைக்கு விட்டிருக்கும் குடியிருப்புதாரர்கள் தாங்கள் குடியிருந்த வீட்டுக்கான வாடகையை கொடுக்காததால் அவர்கள் மீது மணிவண்ணனும் அவரது மகனும் கோபம் கொண்டனர்.


இதனால் வீட்டில் வசிக்கும் குடியிருப்புவாசியின் 7 வயது மகளுக்கு மின்சாரம் பாய்ச்சி கரண்ட் ஷாக் கொடுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் போலீஸாரால் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சாரம் பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

HOUSEOWNER, TENANT, RENTALHOUSE, MADURAI, TAMILNADU, ELECTRICSHOCK, BIZARRE, CRIME, POLICE, MINORGIRL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS