குறட்டை விட்டால் தண்டனையா?: 40 மாதம் தாக்குப்பிடித்த பிணையாளி!

Home > தமிழ் news
By |

ஜப்பானின் பத்திரிகையாளர் ஜும்பெய் யசூடா சிரியா நாட்டின் தீவிரவாதிகளிடையே பிணையாளியாக பிடிபட்டு 40 மாதங்களுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டு உடல், எலும்புகள் எல்லாம் பாதிக்கப்படும் அளவுக்கு சித்ரவதை  செய்யப்பட்டு தற்போதே சொந்த நாடான ஜப்பானுக்கு திரும்பியுள்ளார்.

 

சிறைக் கொடுமைகளை விடவும் தீவிரவாதிகளிடையே கடும் சித்ரவதை அனுபவித்த யசூடா கடைசி 8 மாதங்களில் ஏதுமற்ற வெற்றிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த நாட்களை ’சைக்காலஜிக்கல் செல்’லில் இருந்த நாட்கள் என்று விமர்சிக்கிறார்.

 

எல்லாவற்றிலும் கொடுமை அவர் தூங்கும்போதூ குறட்டை விடக் கூடாது என்பது முக்கியமான விதி. ஆனால் யசூடா குறட்டை விடுவதற்கு மட்டுமன்றி தும்மல் முதலான எவ்வித சத்தமும் எழுப்பும் அனுமதியின்றி அவற்றை அடக்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதற்கென 20 நாட்கள் சாப்பிடாமலும் இருந்து பார்த்துள்ளார்.  தற்போது ஜப்பானுக்கு திரும்பியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

JAPAN, HOSTAGE, JOURNALIST, SYRIATERRORISTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS