'கஜா' போல மீண்டும் ஒரு புயல் வருமா?.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!

Home > தமிழ் news
By |

இந்த ஆண்டு போதுமான மழை இல்லையே, அடுத்த ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமோ? என மக்கள் அச்சப்பட்டு வந்தனர். தற்போது மக்களின் அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல, நேற்று தொடங்கி சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

 

இந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,''கஜா புயல் பாதித்த டெல்டா பகுதியில் இருந்து மேகக்கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் வரும் என்ற அச்சம் தேவையில்லை. அதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த காற்றழுத்தழுத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடையக்கூடும் இதன் காரணமாக, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

 

சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும்(21-ம்தேதி), நாளையும்(22-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அதிகமான அளவு மழையைப் பெறாது.23-ம் தேதி வேண்டுமானால், மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அச்சுறுத்தும் வகையில் மழை ஏதும் இல்லை. ஆதலால் டெல்டா பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் கனமழை பெய்யும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

 

சென்னையைப் பொறுத்தவரை இன்றும், நாளையும் கனமழை இடைவெளிவிட்டுப் பெய்யக்கூடும். இந்த இருநாட்கள் மழை பெய்யாவிட்டால், வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது என்று கூட எடுத்துக்கொள்ளலாம். அடுத்துவரும் இரு நாட்கள் மழை சென்னைக்கு மிகவும் முக்கியமானதாகும்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

GAJACYCLONE, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS