மழை குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!
Home > தமிழ் newsதென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதாக அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருவதாகவும் இதனால் இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாளை குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் 8-ஆம் தேதி குமரிக் கடல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் புதுவையில் பரவலாக மேகமூட்டம் காணப்படும் என்றும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கடலோர தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மேகமூட்டம் காணப்படும் என்றும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா பாக்குற எங்களுக்கு தெரியாதா எப்படி ட்விஸ்ட் அடிக்கும்னு?’:தமிழ்நாடு வெதர்மேன்!
- 'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை!
- மீண்டும் தொடங்கிய பருவமழை?.. சென்னை வெதர்மேன் விளக்கம்!
- Watch - Daring pilot forced to land flight sideways due to intense winds and rain
- Meteorologist Reads Weather Report With 1-Yr-Old Son On Her Back; Watch Video
- 'மழை தொடர்பான பதற்ற செய்திகளை'.. வாட்ஸ்அப்பில் பரப்பி பயமுறுத்தாதீர்கள்!
- அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்
- இடி சத்தத்திற்கு பயந்து வளர்ப்பு நாய் ஒளியும் இடத்தை பாருங்கள்! வைரல் வீடியோ!
- ’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ!
- நிவாரண முகாம்களை தயார் நிலையில் வையுங்கள்...தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்!