'யெல்லோ அலெர்ட் எச்சரிக்கை'..மீண்டும் ஒரு கனமழையைத் தாங்குமா கேரளா?

Home > தமிழ் news
By |

கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சமீபத்தில் பெய்த மழையை யாரும் மறந்திருக்க முடியாது.இந்நிலையில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதோடு டெல்லி, மும்பை, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப் பொழிவும், கனமழையும் பெய்து வருகிறது. இதையடுத்து அம்மாவட்டத்தின் குல்லு, கங்கரா மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையில் சிக்கி அம்மாநிலத்தில் 8 பேர் இதுவரை இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

கேரளாவைப் பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இடுக்கி, வயநாடு, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ‘யெல்லோ அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தற்போதுதான் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிவரும் நிலையில்,மீண்டும் அங்கு யெல்லோ அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பது கேரள மக்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, HEAVY RAIN, YELLOW ALERT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS