'வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை'...சென்னைக்கு மழை எப்போது?
Home > தமிழ் newsதமிழகத்தில் நாளை மழை தொடங்க வாய்ப்பிருப்பதாகவும்,வரும் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும்,இதனால் பரவலான மழையினை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது ''மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது.இதனால் நாளை தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும்,டிசம்பர் 5-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு தென் கிழக்கே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலிமை கொண்டதாக உருவாகும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது.இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்''என செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'சென்னையை ஏமாற்றிய பருவமழை'...தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
- 'வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி'...சென்னைக்கு என்ன அப்டேட்?...வானிலை மையம் தகவல்!
- பிரதமரை சந்தித்த முதல்வர் கஜா புயல் பற்றி என்ன பேசினார்?
- இருக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன்!
- கனமழை எதிரொலி: 'சென்னை உட்பட'..5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
- பாதிப்படைந்த டெல்டா மக்களுக்கு உதவ சிம்பு சொல்லும் யோசனை: வீடியோ உள்ளே!
- இந்தந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் மட்டும் தள்ளிவைப்பு!
- சென்னையில் பொழிந்துவரும் மிதமான மழை; உள் தமிழகத்தில் கனமழை!
- கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிடும் தமிழக முதல்வர்!
- கனமழை காரணமாக இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் உத்தரவு!