'ஆராரோ ஆரிரரோ'...தாயாக மாறிய தலைமைக்காவலர்...நெகிழ்ச்சி சம்பவம்!

Home > தமிழ் news
By |

தெலங்கானாவில் தேர்வு எழுத சென்ற பெண்ணின் குழந்தையை கவனித்து கொண்ட காவலரின் செயல் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

 

தெலங்கானா மாநிலம் முழுவதும் நேற்று காவலர்கள் எழுத்து தேர்வு நடைபெற்றது. அப்போது மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் ஜூனியர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது பிறந்து சில மாதங்களே ஆன தன் குழந்தையுடன் காவலர் தேர்வு எழுத வந்துள்ளார் ஒரு இளம் தாய்.தேர்வு அறையில் குழந்தையை எடுத்து செல்ல இயலாததால் தன்னுடன் தனது உறவுக்கார சிறுமியையும் அழைத்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் குழந்தையின் தாய் தேர்வு அறைக்கு சென்றுவிட அந்த சிறுமி குழந்தையை கவனித்து கொண்டிருந்தார்.இந்நிலையில் குழந்தை திடீரென அழ ஆரம்பித்தது.அந்த சிறுமியால் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக்காவலர் முஜிபுர் ரஹ்மான் இதை கவனித்துள்ளார்.

 

உடனடியாக குழந்தையை லாவகமாக தூக்கி பாட்டு பாடி சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் குழந்தையின் தாய்  தேர்வு முடித்துவிட்டு திரும்பி வரும்வரை குழந்தையை பத்திரமாக கவனித்துக்கொண்டுள்ளார். குழந்தைக்கு ஏற்றவாறு ஆராரிரோ பாடி ரஹ்மான் சமாதானம் செய்யும் புகைபடங்களை தெலங்கானாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ரெமா ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது பல பேரால் பகிரப்பட்டு வருகிறது.

 

காவலர்கள் என்றாலே கடுமையாக இருப்பவர்கள் என்ற போக்கு நிலவும் நிலையில் தலைமைக்காவலர் ரஹ்மானின் செயல் அவர்களுக்குள் இருக்கும் தாய்மையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

TELANGANA, POLICE, MUJEEB UR REHMAN, SCTPC EXAM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS