எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன்.இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது ஏழ்மையான குடும்ப சூழல் காரணமாக கல்லூரிக்குச் சென்ற நேரம் போக, மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

 

இந்த மீன் விற்பனையின் மூலம் தான் ஹனன் தனது படிப்பையும், குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.ஹனன் குறித்து கடந்த வாரம் மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.இதற்கு பல்வேறு தரப்பினரும் அவரைப் பாராட்டி உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.

 

ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனனின் நிலையை மிகவும் கடுமையாகவும், கிண்டலாகவும் விமர்சித்தனர்.அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு அவர் போலியானவர் என்றும் அவரை பற்றிய செய்தியில் உண்மை இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்கள்.

 

இதுகுறித்து கருத்துதெரிவித்த ஹனனின்  கல்லூரி முதல்வர் "ஹனனை  பற்றி மாத்ருபூமி நாளேட்டில் வெளிவந்த செய்திகள் உண்மைதான் என்றும் குடும்ப வறுமை காரணமாக மாலை நேரத்தில் மீன் விற்கிறார்,'' எனவும் தெரிவித்தார்.

 

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆதரவு தெரிவித்து, ஹனனுக்கு கேரள அரசு துணையிருக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஹனனும் முதல்வரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

 

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கனக்காகுன்னு அரண்மனையில் ஓணம்-பக்ரீத் காதி விற்பனை தொடக்கவிழா  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு மாணவி ஹனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, காதி வாரியத்தின் ஆடைகளை அணிந்து அவர் ஃபேஷன் ஷோவில் பங்கேற்றார்.

 

அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் மாணவி ஹனனுக்கு கேரள முதல்வர் சிறிய நினைவுப் பரிசை வழங்கி, தொடர்ந்து துணிச்சலுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும், முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும், மலையாளத் திரைப்பட இயக்குனர்கள் இருவர், மாணவி ஹனனுக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

BY JENO | AUG 3, 2018 4:43 PM #KERALA #HANAN HAMID #KHADI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS