‘அந்த நிகழ்ச்சியின் எதிர்விளைவுகளுக்கு நானே பொறுப்பானவன்.. நிறைய இரவுகளில் தூங்கல’!
Home > தமிழ் newsஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘காஃபி வித் கரண்’ பிரபல ஹிந்தி திரையுலகத்தைச் சேர்ந்த கரண் ஜோகரால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலரை ஒப்பிட்டுப் பேசியதாலும் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்த அப்போதைய இந்திய அணியில் இருந்து விலகி உடனடியாக இந்தியாவுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துக்கள் வந்துகொண்டிருக்க மிக அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் தன் கருத்தினை பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோகர் பேசியுள்ளது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதுபற்றி பேசிய கரண் ஜோகர், இந்த நிகழ்ச்சியை தான் முன்னின்று நடத்துவதால் இந்நிகழ்ச்சியினால் உண்டாகும் எல்லா எதிர்விளைவுகளுக்கும், இந்நிகழ்ச்சியில் இருந்து கிளைத்து வரும் எல்லா எதிர்வினைகளுக்கும் தானே பொறுப்பு என்றும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுலை தானே சிறப்பு விருந்தினராக அழைத்ததாகவும் அவர்களின் இந்த நிலைக்கு தானே பொறுப்பானவர் என்றும் கூறி வருந்தியுள்ளார்.
பெண்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கருத்துக்களால் அந்த கிரிக்கெட் வீரர்கள் இருவரும் அதன் விளைவை சந்தித்துள்ளனர் என்றும் கைமீறிப் போன இந்தச் சூழலை சரிசெய்யும் பொருட்டு பல நாட்கள் பல இரவு, தான் தூங்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவை எல்லாவற்றிற்கும் தனது மன்னிப்பையும் கேட்டுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘இந்திய அணியில் இடம் கிடைக்கலனா, இந்த வேலைக்குதான் போயிருப்பேன்: ஹர்பஜன்!
- Rishabh Pant named ICC Men's Emerging Cricketer of the Year; Check out the rest of the award winners!
- 'தரையிலயே படாமல் தரமான சம்பவம்'.. சர்ச்சையை கிளப்பிய கேட்ச்..வைரல் வீடியோ!
- சர்வதேச அங்கீகாரம் தந்து ‘பேபிசிட்டர்’ ரிஷப் பண்ட்டினை கவிரவித்த ஐசிசி!
- ‘ஐபிஎல் தொடருக்கு முன் குணமாகி, அதில் களமிறங்குவேன்’, இந்திய வீரர் நம்பிக்கை!
- Wow! MS Dhoni close to breaking Sachin's massive record
- உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்!
- ‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்!
- 'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்!
- Maxwell who dropped Dhoni yesterday shares interesting tweet