கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய பெண் கடைசியில் சென்றுள்ள இடத்தை பாருங்கள்!

Home > தமிழ் news
By |

பெனிஸ்லோவியாவில் பெண் ஒருவர், கூகுள் மேப்பில் லொகேஷனை பார்த்துக்கொண்டே  ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

 

ஜிபிஎஸ் எனப்படும் கூகுள் லொகேஷன், சாட்டிலைட் மூலம் நாம் பயணிக்கும் சாலைவழிகளை கவனித்து அவற்றை மேப் மூலம் நமக்கு காண்பிக்கும். அதனையும் நேரலையில் நாம் செல்ல செல்ல, நாம் செல்லும் வழியை காண்பித்து நமக்கு வழிகாட்டிக்கொண்டே வரும் அற்புதமான வசதிதான், கூகுள் வழிகாட்டும் மேப். 

 

இதனைத்தான் காரில் ஜிபிஎஸ் என்கிற பெயரில் பொருத்தியுள்ளார்கள். பலரது செல்போன்களிலும் இந்த வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வளர்ந்த நாட்டின் நகரங்களை துல்லியமாக காண்பிப்பது போல் எல்லா ஊர்களிலும் அத்தனை துல்லியமாக இந்த மேப் வழிகாட்டுவதில்லை. நம்மூரில் கூட வழி இல்லாத பாதைக்கு கூகுள் மேப் நம்மை அழைத்துச் செல்வதுண்டு.

 

எனினும் இதனைக் காரணமாகச் சொல்லி தண்டவாளத்தின் மீதேறி கார் ஓட்டிய பெண்மணியின் காரை புகைப்படம் எடுத்து பெனிஸ்லோவியான் காவல் துறையினர் தங்கள் பக்கத்தில் பதிவிட்டு, ’கூகுள் மேப் மீது பழி போடவேண்டாம், அது பாதை இல்லை. ரயில் பாதை என்கிற அடிப்படை அறிவு உங்களுக்கே இருக்க வேண்டாமா?’ என அந்த பெண்ணை கேட்பதுபோல் பலரையும் கேட்டுள்ளனர் 

 

முன்னதாக, சீனாவில் கார் ஓட்டிக்கொண்டே சென்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்த பெண் ஒருவர், கூகுள் மேப்தான் வழிகாட்டியது என்று கூறியிருந்த காரணமும் பிரபலமானது. 

 

GOOGLE, GOOGLEMAP, GPS, PENNSYLVANIA, CAR, TRAINTRACKS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS