ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க, தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு 2014-ல் வழக்கு தொடர்ந்தது. 

 

இந்தநிலையில் 7 பேரையும் தமிழக அரசு  விடுவிப்பதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் தமிழக அரசு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதா? என தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. இதற்கு,''7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். விடுதலை தொடர்பாக 2016-ல் தமிழக அரசு தந்த மனுவை ஆளுநரே பரிசீலித்து முடிவெடுக்கலாம்,''என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

BY MANJULA | SEP 6, 2018 12:40 PM #RAJIVGANDHI #SUPREMECOURT #TAMILNADU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS