'சபரிமலை விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம்'.. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்!

Home > தமிழ் news
By |

சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்களை அனுமதிக்கலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மேலும் பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

இந்த தீர்ப்பு கேரள அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்யுமாறும் வலியுறுத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,''சபரிமலை விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு என்னவென்பதை ஏற்கெனவே தெளிவாக தெரிவித்து விட்டோம். தனிப்பட்டமுறையில் மாநில(கேரளா) அரசுக்கு நிலைப்பாடு இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமே நாங்கள் செயல்படுத்துகிறோம்.

 

சட்டத்தை கையில் யாரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம். உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்வதில்லை, என்பதில் எந்த மாற்றமும் இல்லை,'' என தெரிவித்துள்ளார்.

KERALA, PINARAYIVIJAYAN, SABARIMALATEMPLE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS