காதலியின் செலவை சமாளிக்க திருட்டு: சிசிடிவியில் சிக்கிய கூகுள் ஊழியர்!

Home > தமிழ் news
By |

காதலின் தலையாய கடமைகளுள் ஒன்று காதலிப்பது இன்னொன்று செலவு செய்வது. ஆனால் காதலருக்கு செலவு செய்வதைவிடவும் காதலிப்பதை ஈஸியாக செய்துவிடலாம். காதல் பரிசுகளை அள்ளி அள்ளி வழங்குவதற்கு முன்னர் நம் பர்ஸின் மீது பணத்திற்கு காதல் இருக்கவேண்டும்.

 

காதலருக்கு செலவு செய்வதற்காகவே பலர் பெரும் நிறுவனங்களிலும் பணிபுரியவும் செய்கின்றனர். ஆனால் கூகுள் நிறுவனத்துக்காக பணிபுரியும் ஷிகானி என்னும் தொழில்நுட்பவாதி, தன் காதலிக்காக செலவு செய்யும் பொருட்டு பணம் திருடிய சம்பவம் டெல்லி தாஜ் ஹோட்டலில் நிகழ்ந்தேறியுள்ளது விநோதமாக பேசப்பட்டு வருகிறது.


கூகுள் நிறுவனத்தின் சார்பாக, டெல்லி தாஜ் ஹோட்டலில்  ஐபிஎம் எனும் தொழில்நுட்ப நிறுவனமும் இன்ன பிற நிறுவனங்களும் நடத்திய கான்பிரன்ஸ் ஒன்றிற்கு வந்த ஷிகானி, இந்த நிகழ்வுக்கு வந்த தேவயானி என்கிற பெண்ணுடைய பணத்தை திருடியிருக்கிறார்.

 

பணத்தை தொலைத்ததை அறிந்த பின்னர் அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராவை சோதனை செய்யும்போதுதான் பணத்தைத் திருடிவிட்டு கால் டாக்ஸியில் ஏறிச்சென்ற ஷிகானியை, டாக்ஸியின் எண்ணை வைத்து போலீசார் கண்டறிந்தனர்.

 

விசாரித்ததில் தன் காதலிக்கு செலவு செய்ய வேண்டிய தேவை இருந்ததாகவும் அதற்காக தேவயானியிடம் இருந்து 10 ஆயிரம் பணத்தைத் திருடியதாகவும் வாக்குமூலம் கொடுத்த ஷிகானியிடம் இருந்து 3000 ரூபாயை மட்டுமே மீட்க முடிந்தது. அதன் பின்னர் ஷிகானி கைது செய்யப்பட்டார்.

STEALING, GOOGLEEMPLOYEE, ITGUY, DELHI, TAJHOTEL, LOVE, GIRLFRIEND, ROBBERY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS