கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை அந்த மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. 300-கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்,நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி உயிர் இழந்தார்கள்.2000 கோடிக்கும் மேல் கடும் இழப்பை சந்தித்து இருக்கிறது கடவுளின் தேசம்.
இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான கேரளாவிற்கு இது மிக பெரிய இழப்பாகும்.சுற்றுலா தொழிலை நம்பி பல குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.இந்நிலையில் இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் இடியாக விழுந்துள்ளது.இந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் மீண்டுவர பல்வேறு தரப்பினரும் பல உதவிகளை செய்து வருகின்றார்கள்.
பல்வேறு மாநில அரசுகள்,அரசு ஊழியர்கள்,பல்வேறு நிறுவனங்கள் என பலரும் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரளாவிற்கு வழங்கி வருகிறார்கள்.இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது சார்பாகவும்,தனது ஊழியர்கள் சார்பாகவும் 7 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவிற்கும் இந்த உதவி தொகை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Slaughtering cows reason for Kerala floods, claims BJP lawmaker
- Apple to donate huge sum for Kerala, adds donate button in iTunes and App Store
- Hindu Mahasabha website hacked and recipe of beef dish uploaded
- 700 கோடி உதவிக்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் ?பினராயி விஜயன் விளக்கம் !
- 175 டன் நிவாரணப் பொருட்களுடன், கேரளா செல்லும் எமிரேட்ஸின் 12 கார்கோ விமானங்கள்!
- நாங்க எப்போ அப்படி சொன்னோம்...700 கோடி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் !
- Girl donates money to Kerala from surgery funds, hospital to repay back her kindness
- Kerala blames Mullaperiyar Dam at SC for floods
- கடவுளின் தேசத்திற்காக உருகும் பாகிஸ்தான்..எந்த உதவியும் செய்ய தயார்: இம்ரான் கான் !
- Inspiring: 12-yr-old TN girl donates Rs 5,000 from money raised for her heart surgery