இன்றைய ’கூகுளின்’ தேடுபொறியில் இருக்கும் இந்த தமிழர் யார்?

Home > தமிழ் news
By |

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியில், தலைசிறந்தவர்களின் புகைப்படங்களை டூடுளாக வைத்து கவுரவிப்பது வழக்கம். இன்றைய கூகுளின் தேடுபொறியில் உள்ள டூடுள் ஒரு தமிழரின் புகைப்படத்தை வைத்து கவுரவித்திருக்கிறது.

 

அவர்தான் டாக்டர் கோவிந்தப்பா வெங்கடசாமி.  விருதுநகர் அருகே உள்ள  சிவகாசி வடமலாபுரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பின்னாளில் மருத்துவம் பயின்றார். பின்னர்  மகப்பேறு மருத்துவம் பயின்று, அதில் நிபுணர் ஆனார். ஆனால் பின்னாளில் இருமுறை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் கண் மருத்துவம் பயின்று, அந்த பிரிவில் நிபுணரானார்.

 

அதன் பின்னர் இவர், மதுரை தொடங்கி சர்வதேச தரத்தில் கோவை உள்ளிட்ட பல இடங்களில் அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கினார். உலக அளவில் சிறந்த கண் மருத்துவ நிபுணர்களில் ஒருவரான இவரின் 100வது பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில்தான் கூகுள் இத்தகைய டூடுளை தனது தேடுபொறியின் முகப்பில் வைத்துள்ளது.

GOOGLE, GOVINDAPPAVENKATASWAMY, GOOGLEDOODLES, ARVINDEYEHOSPITALS, HEALTHCARE, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS