இந்தியாவில் வாழும் குடிமகன்களின் தனிமனித தரவுகளை ஆதாரில் பதிவு செய்து அதனை கணினிமயப்படுத்தியிருக்கிறது இந்திய அரசு. மேலும் ஆதார் எண்தான் இந்திய குடிமகன்களின் முக்கிய அரசு ஆவணங்களுடனும், வங்கிக் கணக்குடனும், செல்போன் எண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி எனப்படும் சேவை வரி மையம் கூட ஆதாரையே முதன்மையாக கேட்கிறது. இதனால் ஆதாரை தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பல நிறுவனங்களும் தனிமனிதர்களும் ஆதாருக்கான மென்பொருளை தரவிறக்கியுள்ளனர். இந்த நிலையில் ட்ராய் இயக்குனர் ஷர்மா தனது ஆதார் எண்ணை சமூகவலைதளத்தில் அளித்து, அதனை பிரான்சை சேர்ந்த எலியட் ஹேக் செய்த தகவல் நம்மிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையொட்டி யுஐடிஏ ஆதார் சம்மந்தப்பட்ட தகவல்களை தேவையின்றி யாருக்கும் பகிர வேண்டாம் என அறிவித்தது. அதே சமயம் ஆதாருக்கான சேவை எண் 1800-300-1947 என பலரது ஆண்ட்ராய்டு மொபைலில் தொடர்பு எண்ணாக பதிவாகியிருப்பது பெரும் பீதியை கிளப்பியது. இதன் மூலமாக தனிமனித தரவுகளை ஹேக்கிங் செய்துவிடுவார்கள் என்கிற சந்தேகமும் சர்ச்சையும் இந்திய மக்களிடையே எழுந்தது.

 

உண்மையில் ஆதார் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1947 என்பதே சரியானதாகும். ஆனால் ஆண்ட்ராய்டு மொபைலில் இந்த தவறான சேவை எண் பதிவாகியிருக்கிறது. 

 

இதற்கு விளக்கமளித்த கூகுள் நிறுவனம், 2014ல் இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷனில் ஆதார் சேவை எண்ணுக்கு பதிலாக வேறு ஒரு தவறான எண் பதிவாகியிருப்பதாகவும், அதனை பயனாளர் தாமாகவே நீக்கிக் கொள்ளுமாறும் கோரி, பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

BY SIVA SANKAR | AUG 4, 2018 11:35 AM #GOOGLE #AADHAAR #INDIA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS