'ஏன் எல்லாரும் இதையே கேக்குறீங்க' .. காண்டான கூகுள் ட்விட்டரில் வைரல் கேள்வி!
Home > தமிழ் newsகூகுளிடம் தொடர்ந்து பயனாளிகள் பலர், ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டதால் கொந்தளித்த கூகுள் ஒரு அதிரடியான ட்வீட்டினை பதிவிட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. அதனால் மொழி தெரியாதவர்களும் தங்களுக்கு தேவையானவற்றை தேடுவதற்கு உதவும் வைகயில் கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸிடண்ட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த கூகுள் அசிஸ்டெண்ட் என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது மனிதர்கள் பேசும் சத்தத்தை மொழி மூலம் உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு தகவல்களை வழங்குகிறது.
இந்த வசதியை தவறாக உபயோகிக்கும் பலர் கூகுள் அசிஸ்டெண்டிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா கூகுள் ? என விளையாடும் விதமாக கேள்விகளைக் கேட்டுவந்துள்ளனர். இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் கடுப்பான இந்தியாவின் கூகுள் தலைமை நிறுவனம் ஒரு அதிரடியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ள்ளது.
அதில், ‘எங்களுக்கு உண்மையாக..தெரியவேண்டும், ஏன் கூகுள் அசிஸ்டெண்டிடம் திருமணம் செய்துகொள்வாயா என்று எல்லாரும் கேட்கிறீர்கள் ? என ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பலரும் நகைச்சுவையாக ரீ-ட்வீட் செய்துவருகின்றனர்.
அதில் ஒருவர்,’நீ மட்டும் ஏன் நாங்கள் செல்லும் லொகேஷனை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறாய், அந்த லொகேஷனுக்கு நீ வந்துகொண்டே இருக்கிறாய்?’ என்று கூகுளை திருப்பி கேட்டுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘எனக்கு துணையாக இருப்பார்’.. நீண்ட நாள் தோழியை மணந்த பின் ஹர்திக் பேட்டி!
- ப்ரஷரில் உள்ள பெண்களுக்கு, ‘ஆண்கள் வாடகைக்கு’.. விநோத ஆப்!
- ஒருவழியாக ‘ஒட்டகப் பாலை’ அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்!
- ‘2-க்கும் மேல் குழந்தை பெற்றவர்களிடம் இருந்து இதையெல்லாம் பறிக்கணும்’: பாபா ராம்தேவ் அதிரடி!
- ‘ஒரே நேரத்தில் இவ்ளோ பேருக்குதான் மெசேஜ் அனுப்பலாம்’.. ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிய வாட்ஸ்ஆப்!
- ‘சியர் கேர்ள்ஸே தேவையில்ல..இவர் ஒருவரே போதும்’.. நடனமாடும் அம்பயரின் வைரல் வீடியோ!
- ‘சர்ச்சைக்குரிய ஓவியங்களால் பரபரப்பு’.. மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!
- ‘சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்’.. உதவிக்கரம் நீட்டும் கிரிக்கெட் வீரர்கள்!
- உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்!
- ‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்!