ரொம்ப ஆடியாச்சு..இனி ரிலாக்ஸா மேட்ச் மட்டும் பாக்கப் போறேன்.. ஓய்வு குறித்து கோலி!

Home > தமிழ் news
By |

நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெறுவதில் பிஸியாக இருந்ததால் ஓய்வெடுக்க போவதாக விராட் கோலி ஜாலியாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பயிற்சி ஆட்டம் தொடங்கி, டெஸ்ட் வரை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு, பெர்த், மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட வெவ்வேறு மைதானங்களில் விளையாடியது. அவற்றுள் 2-0 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. 71 வருடங்கள் கழித்து இந்திய அணி அடைந்த மாபெரும் வரலாற்று வெற்றியாக இது கருதப்பட்டது. மேலும் ஐசிசியால் கடந்த 2018-ஆம் வருடத்துக்கான கனவு கிரிக்கெட் அணியின் சர்வதேச கேப்டனுக்கான விருதுக்கு தேர்வாகி கோலி கவுரவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் நியூஸிலாந்துக்கு நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நியூஸிலாந்துடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி அதிலும் 3-0 என்கிற விகிதத்தில் தொடரைக் கைப்பற்றியது. இதில் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 49வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இவை எல்லாவற்றிலும் கேப்டனாக முன்னின்று விளையாண்ட கோலியின் கள ஆக்ரோஷம் குறித்து அனைவராலும் பரவலாக பேசப்பட்டது. இதனிடையே அடுத்து வரவுள்ள உலகக்கோப்பையை எதிர்கொள்ள இந்திய அணி முழுவீச்சில் தயாராகி உள்ளதாகவும், அதற்குள் கோலிக்கு ஓய்வு தேவை என்றும் பிசிசிஐ முடிவு செய்தது. அதனால் அடுத்துள்ள 2  ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடுவதில் இருந்து கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கோலி, தனது வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வந்துவிட்டதாலும், தொடர்ச்சியாக ஓய்வின்றி இருந்ததாலும் இந்த நேரத்தில், தான் ஓய்வெடுக்கப் போவதாகவும் ரிலாக்ஸாக அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ICC, BCCI, VIRATKOHLI, AUSVIND, NZVIND, WORLDCUP2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS