ஓய்வை அறிவிக்கும்போது ஒரு சொட்டு கண்ணீர் விடமாட்டேன்.. பிரபல வீரர்!

Home > தமிழ் news
By |

 கிரிக்கெட் வாழ்க்கையில் எனது ஓய்வை அறிவிக்கும்போது என் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது என, கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

1999-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான கவுதம் கம்பீர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கவுதமின் பங்கு அளப்பரியது. ஷேவாக்,சச்சின் என முன்னணி வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்த போது, பொறுப்புடன் ஆடி இந்திய அணி கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

 

கடந்த 2 வருடங்களாக இந்திய அணியில் இருந்து கவுதம் ஓரம் கட்டப்பட்டு வருகிறார். இந்தநிலையில் அவர் ஓய்வு குறித்து டெல்லியில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில்,''எனக்குள் கிரிக்கெட் உணர்வு இந்த நேரம் வரை  இருந்து கொண்டிருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சியான சூழலில் ஓய்வறையில் இருக்க விரும்புகிறேன். அதற்காகத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். என்னைப் பொருத்தவரை, நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்நாளில்கூட உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த மாட்டேன்,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS