'அனைத்தும் முடிந்து விட்டது'.. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற வீரர்!
Home > தமிழ் newsஇது மிகக் கடினமான முடிவு. ஆனால் வேறு வழியில்லை அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என, தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் கவுதம் கம்பீர்(37).
இந்தியாவின் மிகச் சிறப்பான ஆட்டகாரர்களில் ஒருவர். குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கவுதம் கம்பீர் அடித்த 97 ரன்களே இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தது. இந்தியாவின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கம்பீர் இதுவரை இந்தியாவுக்காக 242 கவுதம் போட்டிகள் ஆடி, 10324 ரன்கள் குவித்திருக்கிறார்.
கொல்கத்தாவுக்காக ஐபிஎல் போட்டிகளில் 2 முறை கோப்பை வென்று கொடுத்த கம்பீர், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதனை அவரே ஒப்புக்கொண்டு, பாதியிலேயே விலகினார்.
இந்த நிலையில் தனது ஓய்வு குறித்த வீடியோவில்,''இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியபோது நம்பிக்கையுடன் தான் இருந்தேன். ஆனால், அனைத்துப் போட்டிகளும் மோசமான அனுபவமாக முடிந்தது. அப்போதே, ‘இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்து விட்டேன். “இது முடிந்துவிட்டது’ என்று சொல்ல வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன,'' என மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கம்பீருக்கு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மிஸ் யூ கம்பீர்...
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'இவங்க திருந்தவே மாட்டாங்க போல'....இந்திய அணியை அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய பத்திரிகை!
- 'தீவிரவாத குற்றச்சாட்டு'...பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர் திடீர் கைது!
- 'மரண அடி'னா இதுதானா?.. அசால்ட்டாக '200' ரன்களைக் குவித்த இளம் வீரர்!
- WATCH | Dwayne Bravo Introduces A New Pre-Wicket 'Chicken Celebration' & It's Hilarious
- 'பெண்ணின் முன் ஆடையின்றி தவறாக நின்றதாக புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நஷ்டஈடு!
- 'ரோஹித் சர்மா' அணியில் இல்லாவிட்டால் ஆஸியை ஆதரிப்பேன்?.. ஹர்பஜன் விளக்கம்!
- 'இவரு பந்துல ஆடுறது ரொம்ப கஷ்டம் '.. யார்க்கரால் ஸ்டெம்புகளை சிதறவிட்ட பவுலர்!
- 'ஐபிஎல் ஏலத்துக்கு' இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது தெரியுமா?
- யாருக்கும், எதையும் நிரூபிக்கணும்னு 'எங்களுக்கு' அவசியம் இல்ல
- 'ப்ரித்வி ஷாக்கு பதிலா இவர களமிறக்குங்க'...பிரபல வீரர் சொல்லும் அட்வைஸ்!