'சேவாக், சச்சினுடன் விளையாட மாட்டேன்'... தோனியை விளாசிய கம்பீர்!
Home > தமிழ் newsசேவாக், சச்சின், கம்பீருடன் சேர்ந்து விளையாட மாட்டேன் என்று தோனி சொன்னதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,''2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிபி சீரிஸ் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் சச்சின், சேவாக், தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நான் 3-வது வீரராகவும் களம் இறங்கினேன். சச்சின், சேவாக் குறைவாக ரன் எடுக்கிறார்கள்,எனக்கூறி அவர்களுடன் என்னையும் ஓரம்கட்ட தோனி முடிவு செய்தார்.
தொடர்ந்து சேவாக்குடனும், சச்சினுடன் இனிமேல் கம்பீரை விளையாட அனுமதிக்க முடியாது. நானும் 3 பேருடன் விளையாட முடியாது என்று தோனி கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.தொடக்கத்தில் நாங்கள் 3 பேரும் ஒன்றாக விளையாடவில்லை. எங்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத சூழலில் எங்கள் 3 பேருடன் தோனி விளையாட முன்வருவார்.
எங்கள் 3 பேருடன் விளையாடமாட்டேன் என்று தோனி முதலில் முடிவெடுத்தார். அதன்பின், எங்கள் 3 பேருடன் சேர்ந்து விளையாட முடிவு செய்தார். இதில் இருந்து தோனி முதலில் எடுத்த உண்மையான முடிவு தவறானதா அல்லது 2-வது எடுத்த முடிவு தவறானதா. கேப்டனாக தோனி முடிவெடுத்தார். ஆனால், அணியில் வீரர்களாக இருக்கும் எங்கள் 3 பேருக்கும் அவரின் முடிவு பேரதிர்ச்சியாக இருந்தது,'' என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- IND v AUS | Rishabh Pant Sledging Pat Cummins Has Made The Internet LOL
- IND v AUS | Virat Kohli Shows Off His Impromptu Dance Skills While Fielding
- விராட் கோலிக்கு ஒரு நியாயம்?.. எங்களுக்கு ஒரு நியாயமா?
- Watch Video: 'கப்பை' எடுத்துக்கொண்டு 'செக்கை' தூக்கி எறிந்த கேப்டன்!
- 'அவருக்கு ஒரு நியாயம்...எனக்கு ஒரு நியாயமா'?....நீதிமன்றத்தில் குமுறிய பிரபல கிரிக்கெட் வீரர்!
- 'பேட்டிங்ல சொதப்பினாலும்,டான்ஸ்ல சொதப்பல'....நம்ம கேப்டன்:வைரலாகும் வீடியோ!
- 'எல்லோரும் புஜாரா ஆக முடியாது'.. ஆஸ்திரேலியாவை வம்புக்கிழுத்த இந்திய வீரர்!
- 'இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட சாதனை'...82 வருடத்திற்கு பின்பு தகர்த்த சுழற்பந்து வீச்சாளர்!
- ஏன்?...எதுக்கு?...நீங்க ஏன் இவ்ளோ ஆவேசப்பட்டிங்க!
- 'அசுர வேகத்தில் தெறித்த ஸ்டெம்ப்'.. 'பிஞ்ச்'சை பஞ்சாக பறக்கவிட்ட பாஸ்ட் பவுலர்!