'எங்கய்யா புடிச்சிங்க இவர'?...'தல தோனி குறித்து வியந்த அதிபர்':சுவாரசியமாக பதிலளித்த முன்னாள் கேப்டன்!

Home > தமிழ் news
By |

இந்திய கிரிக்கெட்டில் தோனி அறிமுகமான போது 'எங்கய்யா இவர புடிச்சீங்க' என பாகிஸ்தான் பிரதமர் தன்னிடம் கேட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி சுவாரசியமாக தெரிவித்துள்ளார்.

 

தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி கடந்த 2004ம் ஆண்டு வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.அந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் சொதப்பி,தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.ஆனால் அதன் பிறகு நடந்த போட்டிகளில் அபாரமாக விளையாடி,தனது திறமையை நிரூபித்ததோடு ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

 

இந்திய அணி கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது.அப்போது நடந்த 3வது ஒருநாள் போட்டியின் முடிவில் 289 ரன்களை துரத்தி இந்தியா வெற்றி பெற்றது. இதில் தோனி 46 பந்தில் 72 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

 

அப்போது ஆட்ட நாயகன் விருதை வழங்கி பேசிய  பர்வேஸ் முஷாரஃப் ''நிறைய பேர் உன் தலைமுடியை வெட்டசொல்லலாம்.ஆனால் அதை நீங்கள் கேட்க வேண்டாம். இது உங்களுக்கு அழகாக இருக்கிறது தோனி” என தெரிவித்தார்.இந்நிலையில் அந்த போட்டியின் முடிவில் பர்வேஸ் முஷாரஃப்,கேப்டன் கங்குலியிடம் கேட்ட கேள்வியினை அவர் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

 

''எங்கிருந்து இவரைப் பிடித்தீர்கள்'' என நகைச்சுவையாக தன்னிடம் கேட்டார்,அதற்கு நான்  “இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் சென்று கொண்டிருந்தார், அவரைப் பார்த்ததும் எங்கள் பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டோம்.” என தானும் வேடிக்கையாக பதிலளித்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.

SOURAVGANGULY, MSDHONI, PAKISTAN, CRICKET, PERVEZ MUSHARRAF

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS