கஜா புயல்:மதியம் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவா?

Home > தமிழ் news
By |

கஜா புயல் காரணமாக காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

வங்க கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், இன்று 9.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து தென் கிழக்கே 300 கி.மீ., தூரத்திலும், நாகையில் இருந்து வட கிழக்கே, 300 கி.மீ., தொலைவில் உள்ளது.

 

இன்று இரவு 11.30 மணிக்கு கடலூர் - பாம்பன் இடையே, நாகை அருகே கஜா புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ., முதல் 100 கி.மீ., வரையான வேகத்தில் காற்று வீச கூடும். பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழை பெய்ய கூடும்.

 

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய கூடும். கஜா புயலால் சென்னைக்கு அதிகமான தாக்கம் இருக்காது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். 

 

இதனை அடுத்து பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோலவே, கஜா புயல் காரணமாக காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு போடப்பட்டுள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS