பாதிப்படைந்த டெல்டா மக்களுக்கு உதவ சிம்பு சொல்லும் யோசனை: வீடியோ உள்ளே!
Home > தமிழ் newsதமிழகத்தை சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும் பொருளாதார சேதங்களையும் செய்துள்ளது. இந்த மனிதர்களின் தலைகாக்க, அவர்களை இந்த மாபெரும் துயரத்தில் இருந்து மீட்டெடுக்க நடிகர் சிம்பு ஒரு யோசனை கூறி வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதில் தானும் தன் ரசிகர்களும் பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருவதாகவும், அதே சமயம் அரசிடமோ, அறக்கட்டளையிடமோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமோ நேரடியாக பணத்தை கொண்டு சென்று தாங்கள் கொடுப்பது எளிதுதான் எனினும் அவை சரியாக சென்று சேர்கின்றனவா என்பது தெரியவில்லை; ஆனால் ஒரு பாமரன் கொடுக்க நினைக்கும் சேவைகளை தேவைப்படுபவர்களிடம் சென்று சேர்ப்பது எளிதாக இல்லை.
எனவே முடிந்தவர்கள் 100 ரூபாயானாலும், சற்றே முடிந்தவர்கள் 10 ரூபாயானாலும் அவற்றை செல்போன் நெட்வொர்க் ஃபண்ட் டிரான்ஸ்பர் வசதிகள் மூலம் செலுத்தும் பட்சத்தில் அரசின் உதவியுடன் அவற்றை மக்களுக்கு வழங்கலாம் எனவும், இதே யோசனை மற்றும் திட்டத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருந்தால் #SaveDelta #uniteforhumanity #unitefordelta ஆகிய ஹேஷ்டேகுகளின் கீழ் இதே கருத்தை பதிவு செய்து தன் கருத்தை பகிருமாறு மக்கள் முன் விண்ணப்பத்து, எல்லாம் நல்லதாகவே நடக்கும்; எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவார் என்று முழங்கியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- எந்த இடம் 'வலி கண்டாலும்' கண்ணுதானே கலங்கும்...வைரல் புகைப்படம்!
- 'கஜா' போல மீண்டும் ஒரு புயல் வருமா?.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!
- Fake video of Cyclone Gaja goes viral in TN; Watch here
- இந்தந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் மட்டும் தள்ளிவைப்பு!
- சென்னையில் பொழிந்துவரும் மிதமான மழை; உள் தமிழகத்தில் கனமழை!
- கஜா:மின் கம்பங்களை சீரமைத்த ஊழியருக்கு விபத்து; ஓடிவந்து கைப்பிடித்த அமைச்சர்!
- Girl killed during Cyclone Gaja after made to sleep in hut due to puberty
- 3,000 Trees Planted By Late Environmentalist 'Maram' Thangasamy Uprooted By Cyclone 'Gaja'
- CM Edappadi Palaniswami announces Rs 1,000 crore as relief for cyclone-hit districts
- சிசிடிவி கேமராவையே திருடிய நூதன கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!