மிரள வைக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோ காட்சிகள்...தீவிரவாதிகளை தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்!

Home > தமிழ் news
By |

கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயரங்கவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகின் 2 ஆம் ஆண்டு கொண்டாட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்திய ராணுவ தளம்  அமைந்துள்ள யூரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டார்கள்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  கடந்த 2016, செப்டம்பர் 29 அன்று இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களின் மீது  திடீர் தாக்குதல் நடத்தியது.

 

யூரி பகுதியில் இந்திய ராணுவ தளத்தின்  மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் ஊடுருவ இருந்த தீவிரவாதிகள் பலரை,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி  அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

இந்நிலையில் அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்ட இந்திய ராணுவம்,பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 7 பதுங்குக் குழிகளை இந்திய ராணுவம் அழித்த போது எடுக்கப்பட காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.மேலும்  ஆளில்லா விமானம் மற்றும் ‘தெர்மல் இமேஜிங், கேமராக்களால் இவ்வீடியோக்கள் எடுக்கப்பட்டு ராணுவ தலைமைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

INDIANMILITARY, PAKISTAN, SURGICAL STRIKE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS