'மீண்டும் ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்'...பலியான ராணுவ அதிகாரி...கொந்தளிப்பில் வீரர்கள்!

Home > தமிழ் news
By |

புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சோகம் மறைவதற்குள்,மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளார்கள்.இது ராணுவ வீரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமாவின் பிங்லான் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட மொத்தம் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இரு வீரர்கள் படுகாயமடைந்தார்கள்.

இந்த தாக்குதல் குறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர் ''நள்ளிரவில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் பிங்லா பகுதிக்கு சென்றனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நமது வீரர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினார்கள்.இதற்கு ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.தற்போது துப்பாக்கி சண்டை முடிந்து விட்டபோதிலும் தேடுதல் வேட்டை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக'' அவர் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS