"இனிமேல் சங்கர் சாரை அந்த டீ கடையில் பார்க்க முடியாது" கிராமப்புற மாணவர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கிய ஆசான்!
Home > தமிழ் newsஇன்றைய காலை பொழுது "சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி' நிறுவனர் சங்கரன் தற்கொலை என்ற செய்தியோடு தான் விடிந்தது.அது ஐ.ஏ.எஸ் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் கண்டிப்பாக பேரதிர்ச்சியாக தான் அமைந்திருக்கும்.யார் இந்த சங்கர்?
ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்றால் டெல்லிக்கு சென்றால் தான் முடியும்.இது தான் 2004-ம் ஆண்டுக்கு முன் இருந்த நிலைமை.ஆனால் அதை முற்றிலுமாக மாற்றி அண்ணா நகரை தென்னகத்தின் ஐ.ஏ.எஸ் பயிற்சி களமாக மாற்றி காட்டியவர் தான் இந்த சங்கரன் என்ற சங்கர்.
திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தவர் தான் சங்கரன்.அதற்காக கடினமாக பயின்று பல முயற்சிகள் எடுத்தும் இறுதிவரை ஐஏஎஸ் என்பது அவருக்கு எட்டா கனியாகவே போய்விட்டது.இருந்த போதிலும் தன்னை போன்று கிராமப்புறத்தில் இருந்து வரும் பல மாணவர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காக 36 மாணவர்களுடன் கடந்த 2004-ம் ஆண்டு சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி என்ற பயிற்சி மையத்தை ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில் அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து படித்து வந்தால் தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக முடியும் என்ற கருத்து பயிற்சி மையங்களில் சேர்ந்த பல மாணவர்களிடம் இருந்தது.தம்பி அது தவறு."சிவில் சர்விஸ் என்பது காமன் சென்ஸ்தான்,சரியான பாடத்தை தெளிவா படிச்சாலே யாரு வேணாலும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்" என்ற நம்பிக்கை விதையை பல ஆயிரம் மாணவர்களிடம் விதைத்தவர் சங்கர்.
பயிற்சி அளிப்பதோடு தன்னை சுருக்கி கொள்ளாமல் ஐ.ஏ.எஸ் தேர்வு முறைகளில் செய்யப்படும் மாற்றங்கள் எளிய மாணவர்களுக்கு எதிராக இருந்தால் அதற்கு எதிராக தனது அழுத்தமான எதிர்ப்பு குரலை பதிவு செய்ய எப்போதுமே தவறியதில்லை.பல எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு பணத்தை முக்கியமாகக் கருதாமல் பயிற்சியளித்தவர்.பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் "தம்பி ஒரு 101 ரூபாய் கொடுத்து அகாடெமியில் சேர்ந்துக்க என்று அன்பாக பல மாணவர்களிடம் கூறியவர்.
பயிற்சி வகுப்பின் போது கிடைக்கும் இடைவேளையின் போது தனது மாணவர்களோடு டீக்கடையில் நின்று தேநீர் அருந்தும் அளவிற்கு மாணவர்களோடு ஒரு எளிய மனிதராக பழகியவர்.சங்கர் அகாடமியில் படித்த மாணவ மாணவிகள் பலர், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர்.
பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்,தோல்வியில் துவண்ட பல்வேறு மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைகொடுத்து, எதிர்கால வாழ்க்கையை உருவாக்கித்தந்தவர் இன்று அவர் உயிருடன் இல்லை என்பது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாமானியனும் சாதிக்க முடியும் என்பதற்கு சங்கர் ஒரு பெரும் உதாரணம்.சங்கர் என்பவர் தனி மனிதர் இல்லை.அவர் நிச்சயம் ஒரு சகாப்தம்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'பிறந்தநாளில் காதலியை' சுட்டுக்கொலை செய்து.. தானும் தற்கொலை!
- ஆதார் அட்டையால் சிக்கல்.. ’தற்கொலை மிரட்டல்’விடுத்த மின்வாரிய ஊழியர்!
- Chennai: Woman ends life after hubby tells extramarital affairs were no longer a crime
- Shocking - WhatsApp chatting claims lives of two
- Teen forced to go to school, commits suicide
- ’குழந்தைகளுக்காக லலித்குமாரின் 3 ஆண்டு டார்ச்சரை பொறுத்தேன்’.. நடிகை நிலானி!
- நெல்லை: மனைவிக்கும், 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் தற்கொலை!
- "Dark forces took advantage of my weakness": Man kills family and commits suicide
- ‘பள்ளி விடுமுறை’ என்கிற SMS-ஆல் தற்கொலை.. மதுரை மாணவருக்கு நேர்ந்த சோகம்!
- TN: Couple electrocute themselves after quizzed on extramarital affair