"இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்"...பிரதமரானார் முன்னாள் அதிபர் ராஜபக்சே!
Home > தமிழ் newsஇலங்கை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்கிரம சிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த அதிரடி அரசியல் மாற்றம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று திடீரென உடைந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.
இதனையடுத்து அதிரடி மாற்றமாக,இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ஹனிமூன் போன இடத்துல இப்படியா செய்றது?.. தம்பதியை வறுத்தெடுக்கும் உறவினர்கள்
- What? Couple gets drunk during honeymoon, buys hotel in Sri Lanka
- Sri Lanka suspends yet another cricketer
- நான் என்ன பைத்தியமா?..குல்தீப் யாதவ்விடம் சத்தம் போட்ட 'கூல்' தோனி!
- Sri Lanka admits to violating ICC code of conduct
- Sri Lanka skipper Dinesh Chandimal charged with ball-tampering
- பால் டேம்பரிங் புகாரால்...களத்துக்கு வர மறுத்த இலங்கை வீரர்கள்
- Popular cricketer's father murdered
- Wild elephant electrocuted while trying to enter farmland
- Nidahas Trophy: Sri Lanka vs Bangladesh Results