புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் சென்ற விமானம் மாயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Home > தமிழ் newsபிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் சென்ற விமானம் மாயமாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள நான்டஸ் கால்பந்தாட்ட அணி வீரரான எமிலியானோ சாலா, நாந்த் கழகம் சார்பாக விளையாடிவந்தார். தற்பொழுது வேல்ஸ் நாட்டிலுள்ள கார்டிஃப் சிட்டி என்கிற கால்பந்தாட்ட அணி எமிலியானோ சாலாவை இந்திய மதிப்பில் ரூ.138 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து வேல்ஸ் நாட்டிற்கு செல்ல இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையிலான சிறிய ரக விமானத்தின் மூலம் பிரான்சிலிருந்து வேல்ஸ் நாட்டிற்கு எமிலியானோ சாலா சென்றுள்ளார். ஆனால் விமானம் சனல் தீவுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, திடீரென ஏற்பட்ட கோளாறு சம்பந்தமாக தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும் விமான கட்டுப்பட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காணாமல் போன எமிலியானோ சாலா, மீண்டுவந்து அணிக்கான தனது பங்களிப்பை சிறப்பாக செய்வார் என சக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான எமிலியானோ சாலா சென்ற விமானம் மாயமானது அவரது ரசிகர்களிடையே பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Spicejet pilot makes hilarious in-flight announcements; Goes viral
- ‘ஃபிளைட்டிலயா புகை பிடிக்கணும்’.. பயணிக்கு நேர்ந்த சோதனை!
- Anil Kumble's Gesture Towards Fan On The Same Flight Shows What Humility Is All About
- Passengers On Domestic Flights Will Soon Be Able To Make Calls & Access Internet Mid-Air
- Trains To Have Aircraft-Like 'Black Box' To Track Sequence Of Accidents
- IndiGo Aircraft Engulfed With Thick Smoke; Passengers Evacuated By Emergency Slide
- The Truth Behind This Viral Photo Of Diamond Studded Emirates Plane
- Thief Used Google Maps To Target Rich Areas; Took Flights To Rob Houses
- WATCH | Flight Engine Cover Falls Off Mid-Air; Passengers Freak Out
- 'விமானத்தில் தனது ஆசிரியரை கட்டியணைத்து கௌரவித்த விமானி'...நெகிழ்ச்சியான வீடியோ!