300 விடலைப் பருவ ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள கால்பந்தாட்ட நடுவர்!

Home > தமிழ் news
By |

நார்வேயி ஒஸ்லோ பகுதியில் 300 சிறுவர்கள் மற்றும் விடலைப் பருவ இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பலாத்காரம் செய்துள்ள கால்பந்தாட்ட நடுவர் அகப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

2011ம் ஆண்டில் இருந்து இதே வேலையாக இருந்துள்ள இந்த கால்பந்தாட்ட நடுவர், சமூக வலைதளத்தின் மூலமாக நார்வே மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களை குறிப்பாக 13 முதல் 16 வயதுக்குட்ப்பட்ட சிறுவர்களையும் விடலைப் பருவ இளைஞர்களையும் நயமாக பேசி வலைதளம் மூலம் தன் வலையில் வீழ்த்தி, அந்தரங்கமான புகைப்படங்களை சேகரித்துள்ளார்.  அதன் மூலம் அவர்களை மிரட்டியுமுள்ளார். 

 

ஒரு கால்பந்தாட்ட நடுவரான இவர், தற்போது போலீசாரிடம் அகப்பட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது பாலியல் குற்றங்கள் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு தொடரவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் தொடர்ந்துள்ளார். எனினும் தீர்ப்பு 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

SEXUALABUSE, CRIME, NORWAY, 300 TEENAGE BOYS, SEXUAL OFFENCES, FOOTBALL REFEREE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS