ஆற்றில் விழுந்த 6 வயது குழந்தை.. காப்பாற்றிய உணவு டெலிவரி பாய்..வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
ஆற்றில் விழுந்த 6 வயது குழந்தை.. காப்பாற்றிய உணவு டெலிவரி பாய்..வைரல் வீடியோ!

சீனாவின் ஆற்றில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய உணவு டெலிவரி பாயின் மனித நேயமிக்க செயல் வைரலாகி வருகிறது. சீனாவின் ஸெஜியாங்கில் உள்ளது சோஷிங் என்கிற நகரம். இந்நகரத்தில் உள்ள ஆற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளில் துரதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை 6 வயதுடைய மட்டும் ஆற்றில் தவறி விழுந்தது. 

 

விழுந்த நிலையில் தத்தளித்து தடுமாறியபடி கத்திய அந்த குழந்தையினை பார்த்து இன்னொரு குழந்தையும் கத்தத் தொடங்கியது. யாரேனும் அந்த குழந்தையை காப்பாற்ற அவ்வழியே வந்தால்தான் உண்டு என்கிற நிகையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்தான் மேற்குறிப்பிடப்பட்ட உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்பவர். வந்தவர் முதலில் தன் செல்பொனை பொறுப்பாக தரையில் வைத்துவிட்டு, கீழே இறங்கிச் சென்று குழந்தையைக் காப்பாற்றியவர், பின்னர் ஓடிச்சென்று குழந்தையின் ஷூவையும் எடுத்து வந்துள்ளார்.

 

23 வயதான ஹீ லின்பெங்  என்கிற இந்த இளைஞர் தக்க தருணத்தில் வந்து குழந்தையைக் காப்பாற்றியுள்ள  நெகிழ்வான நிகழ்வினால் அந்த இளைஞரை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

DELIVERYBOY, CHILD, VIRAL, VIDEO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS